இந்தியாவில் மருத்துவ படிப்பு மேற்கொள்ள நீட் நுழைவுத் தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வருகிற கல்வியாண்டில் இளநிலை மருத்துவ படிப்பு மேற்கொள்ள விரும்புபவர்களுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே 7ஆம் தேதி நடைபெற்றது. தேர்வர்களின் வசதிக்காக தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளில் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்த நீட் தேர்வை இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளும் சேர்த்து கிட்டத்தட்ட 20 லட்சத்துக்கும் மேலானோர் எழுதி உள்ளனர். இதற்கான ஆன்சர் கீ நேற்று முன்தினம் (ஜூன் 4) neet.nta.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து முடிவுகள் எப்போது வெளிவரும்? என தேர்வர்கள் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் ஜூன் 15ம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
