மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கொரோனா பரவல் மீண்டும் உலக நாடுகளை அச்சுறுத்திவரும் நிலையில், கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள மக்களை மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
பூஸ்டர் டோஸாக செயல்படும் இந்த மருந்து இன்று முதல் கொரோனா தடுப்பு திட்டத்தில் சேர்க்கப்படும் என்றும், தனியார் மருத்துவமனைகளில் கிடைக்கும் என்றும், 18 வயதுக்கு மேலானவர்கள் போட்டுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
