corona india

அதிகரிக்கும் கொரோனா.. 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்..!

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்கள் விழிப்புடன் இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் அவசர நிலை நீடிக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், மாநில மருத்துவ சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால், விழிப்புடன் இருக்கவும், பரிசோதனை, கண்காணிப்பு, சிகிச்சை மற்றும் தடுப்பூசி முறையை தவறாமல் பின்பற்றவும் உத்தரவிட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா, குஜராத், தெலுங்கானா, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கும் இதே போன்ற உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.