நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் திங்கள்கிழமை (ஜூலை 22) தொடங்குகிறது. இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
ராஜ்யசபா மற்றும் லோக்சபாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன், ஜூலை 21ம் தேதி காலை 11 மணிக்கு, பார்லிமென்ட் ஹவுஸ் அனெக்ஸின் பிரதான குழு அறையில், அனைத்து கட்சி கூட்டம் நடக்கிறது. அரசாங்க நடவடிக்கைகளின் தேவைகளுக்கு உட்பட்டு பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12 ஆம் தேதி முடிவடையும்.
மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், இரு அவைகளும் சுமூகமாக நடைபெற அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்குமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவர் கௌரவ் கோகோய், மாநிலங்களவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பிரமோத் திவாரி ஆகியோர் பங்கேற்கின்றனர். இதனிடையே, பட்ஜெட் கூட்டத் தொடரில், 6 புதிய மசோதாக்களை அரசு தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.