UPI பயனர்கள் ரூ.5 லட்சம் ரூபாய் வரை பரிமாற்றம் செய்யலாம். நாட்டில் UPI செயல்பாடுகளை நிர்வகிக்கும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI), வரி செலுத்துவதற்கான பரிவர்த்தனை வரம்புகளை அதிகரித்துள்ளது.
அந்த வகையில் இன்று (செப்டம்பர் 15) முதல் வருமான வரி செலுத்துதல், மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களின் பில்கள், ஐபிஓ விண்ணப்பங்கள் மற்றும் அரசுப் பத்திரங்களை வாங்குவதற்கு UPI மூலம் ரூ.5 லட்சம் வரை பணம் செலுத்தலாம்.