குஜராத் முதலமைச்சராக 2வது முறையாக பூபேந்திர படேல் பதவியேற்றார்.
குஜராத்தில் நடைபெற்ற தேர்தலில் பாஜக 156 இடங்களை கைப்பற்றி தொடந்து 7வது முறையாக பாஜக ஆட்சியை தக்கவைத்துள்ளது.
- Advertisement -
காந்தி நகரில் உள்ள ஹெலிபேட் மைதானத்தில் குஜராத் முதலமைச்சரின் பதவியேற்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. 2வது முறையாக பூபேந்திர படேல் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் ஆச்சர்யா தேவ்வரத் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.