மத்திய அரசு அறிமுகம் செய்த அதி விரைவு ரயில் சேவையான வந்தே பாரத் மக்கள் மத்தியில் வரவேற்புகளை பெற்று வருகிறது.
அந்த வகையில், ஜிபிஎஸ் டிராக்கர், கேமரா மற்றும் ஏசி உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கிய இந்த வந்தே பாரத் ரயில் சேவையை தென் தமிழகத்திற்கும் வழங்குவதற்கான வேலைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், விரைவில் வந்தே பாரத் ரயில் சேவையில் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும் என ஐசிஃஎப் தொழிற்சாலை மேலாளர் பி.ஜி.மல்லையா தகவல் அளித்துள்ளார்.
அந்த வகையில், நடப்பு நிதியாண்டிற்குள் வந்தே பாரத் ரயில்களில் படுக்கை வசதி அறிமுகம் செய்யப்படும் என்றும், குறுகிய தூர பயணங்களுக்கு வந்தே மெட்ரோ ரயில் பெட்டிகளும் இதனுடன் இணைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
