கடந்த 2019 முதல் 2024 வரையிலான ஐந்து ஆண்டுகளில், பொதுத்துறை வங்கிகள் தங்கள் வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைத்திருக்காத வாடிக்கையாளர்களிடமிருந்து சுமார் 8,500 கோடி ரூபாய் அபராதமாக வசூலித்துள்ளன.
பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகபட்சமாக ரூ.1,538 கோடியும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி குறைந்தபட்சமாக ரூ.20 கோடியும் வசூலித்துள்ளன.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி இந்த தகவலை தெரிவித்தார்.