ஹால்மார்க் இல்லாத தங்க நகைகளையும், தங்க கலைப் பொருட்களையும் விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
நுகர்வோர் நலனைக் கருத்தில் கொண்டு தங்க நகைகளின் தரத்தை உறுதிப்படுத்த ஹால்மார்க் அடையாள எண்ணைப் பதிக்கும் திட்டம் 2021-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளதாக நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- Advertisement -
200-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ள இந்த நடைமுறை வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்படவுள்ளதாக கூறியுள்ளது. எனவே, தனித்துவமான 4 அல்லது 6 இலக்க ‘ஹால்மார்க்’ அடையாள எண்கள் பதிக்காத தங்க நகைகள் மற்றும் தங்க கலைப்பொருட்களை வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் விற்பனை செய்ய தடை விதிக்கப்படுவதாக நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.