அயோத்தி ராமர் கோவில் புதிய வரலாறு படைத்துள்ளது. முதல் 6 மாதங்களில் 11 கோடி பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அயோத்திக்கு வருகை தந்துள்ளனர்.
இந்த ஆண்டு மொத்தம் 33 கோடி பக்தர்கள் உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள இந்த ராமர் கோவில் ஜனவரி 22, 2024 அன்று பிரமாண்டமாக திறக்கப்பட்டது. ஆனால் முதல் ஆறு மாதங்களில் 11 கோடி பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அயோத்திக்கு வருகை தந்துள்ளனர்.
அயோத்தியைத் தவிர உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மொத்தம் 33 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.