பாலிவுட்டின் பெரிய நட்சத்திரங்களில் ஒருவரான ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் (25), தனது தந்தையைப் போல நடிகராக இல்லாமல் இயக்குனராக தனது பயணத்தைத் தொடங்கப் போகிறார். கடந்த வாரம் ஆர்யன் கான் இயக்குனராகப் போவதாக அறிவித்தார். மறுபுறம் தனது நண்பர்கள் மற்றும் பார்ட்னர்களுடன் இணைந்து வோட்கா தொழிலில் இறங்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் மது பிரியர்களுக்கு பிரீமியம் வோட்கா பிராண்டை அறிமுகம் செய்யவுள்ளார்.
இந்த தொழிலுக்காக ஆர்யன் கானும் அவரது நெருங்கிய நண்பர்களும் ஒரு பான நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிகிறது. தந்தையைப் போல் ஆர்யனுக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை. அதனால்தான் அவர் ஒரு தொழிலதிபர் அவதாரத்தில் தோன்றுவார் என தெரிகிறது. ஆர்யன் தனது கூட்டாளிகளான பன்டி சிங் மற்றும் லெட்டி பிளாகாவாவுடன் இணைந்து பிரீமியம் ஓட்கா பிராண்டை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக மிண்ட் இதழ் வெளியிட்டது.