அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூலை 12 வரை நீதிமன்றக் காவல்!
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் நீதிமன்ற அனுமதியின்பேரில் கெஜ்ரிவாலிடம் சிபிஐ மூன்று நாட்களாக விசாரித்து வந்தது. சிபிஐ காவல் நிறைவடைந்த நிலையில், டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது அவரை கூடுதலாக 14 நாட்கள் தங்களது காவலில் ஒப்படைக்குமாறு சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி, விசாரணை நிறைவில் ஜூலை 12-ஆம் தேதி கெஜ்ரிவாலை நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
Posted in: இந்தியா