அருணாச்சல பிரதேச மாநிலம் போம்டியில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் சீட்டா விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் உயிரிழந்தனர். அவர்கள் லெப்டினன்ட் கர்னல் விவிபி ரெட்டி மற்றும் மேஜர் ஜெயந்த் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வியாழக்கிழமை இன்று காலை 9.15 மணியளவில் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுடன் தொடர்பை இழந்தது. இந்த சம்பவம் போம்டிக்கு மேற்கே மண்டல் அருகே நடந்துள்ளது. கவுகாத்தி பாதுகாப்பு துறை மக்கள் தொடர்பு அதிகாரி லெப்டினன்ட் கர்னல் மகேந்திர ராவத், இந்த விவரங்களை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- Advertisement -
இந்த ஹெலிகாப்டர் செங்கேயில் இருந்து மிசமாரிக்கு சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது. களம் இறங்கிய தேடுதல் குழுவினர், பங்களாஜாப் கிராமம் அருகே ஹெலிகாப்டர் சிதைவுகளை கண்டெடுத்தனர். சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.