இந்தியா

நீங்கள் Paytm செயலியை பயன்படுத்துகிறீர்களா? ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு!!

ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி மீறியதன் காரணத்தினால் எந்த ஒரு பண பரிவர்த்தனையையும் பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு தொடர முடியாது என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.

இந்நிலையில், பேடிஎம் வாடிக்கையாளர்கள் அனைவரும் உடனடியாக பிப்ரவரி 29ஆம் தேதிக்கு முன்பாகவே வாலட்டில் வைத்திருக்கும் பணத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த செயல்முறையை முடிப்பதற்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில் ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்களின் நலன் கருதி மார்ச் 15ஆம் தேதி வரைக்கும் இந்த செயல்முறையை நீட்டிப்பு செய்திருக்கிறது.

அதாவது, Paytm பேமெண்ட்ஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் மார்ச் 15ஆம் தேதிக்குள் அது தொடர்பான கணக்கை முடித்துக் கொள்ளும்படி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, Paytm Fastag பயனர்களும் மார்ச் 15 ஆம் தேதிக்கு முன்பாகவே வேறொரு கணக்குடன் இணைந்து கொள்ளும்மாறும் ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixty six − = sixty three

Back to top button
error: