கொல்கத்தாவில் மாடல் அழகிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்து வருகின்றனர். கடந்த மாதம் மூன்று மாடல்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இதற்கு பணப்பிரச்சினை, சரியான வாய்ப்புகள் இல்லாமை, உறவுமுறைகள் சிதைவு போன்ற காரணங்களால் இவர்கள் கட்டாய மரணங்களைச் செய்கிறார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சமீபத்தில் கொல்கத்தாவை சேர்ந்த பூஜா சர்க்கார் (21) என்ற மாடல் அழகி தற்கொலை செய்து கொண்டார். கடைசியாக இவர் காதலனுடன் போனில் பேசிவிட்டு தற்கொலை செய்து கொண்டார். எனவே காதல் விவகாரமே தற்கொலைக்கு காரணம் என கூறப்படுகிறது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh