மத்திய பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தில் 8 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
டிசம்பர் 6 ஆம் தேதி, பெதுல் மாவட்டம் மாண்டவி கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயதான தன்மய் சாஹு 400 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்தார்.
பெற்றோர் மகனைத் தேடியபோது, ஆழ்துளை கிணற்றில் இருந்து சத்தம் வருவதை கவனித்தனர். உடனடியாக அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
சிறுவனுக்கு ஆக்ஸிஜன் வழங்குவதற்காக சுரங்கப்பாதையில் ஆக்ஸிஜன் விநியோகத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மாநில பேரிடர் மீட்பு படையினர் நான்கு நாட்களாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆழ்துளை கிணற்றுக்கு இணையாக பள்ளம் தோண்டப்பட்டது. 65 மணி நேரத்துக்கும் மேலாக மீட்புப் பணிகளுக்குப் பிறகு, 55 அடி ஆழத்தில் சிக்கிய சிறுவன் மீட்கப்பட்டார். இருப்பினும்.. சிறுவன் அப்போதே உயிரிழந்தார்.
முன்னதாக, சிறுவனின் தாய் ஜோதி சாஹு தனது மகனைக் காப்பாற்றுமாறு கெஞ்சினார். சீக்கிரம் என் குழந்தையை வெளியே எடுங்க என்று கதறினார். இதே தலைவரோ, அதிகாரியோட பிள்ளையாக இருந்திருந்தால் இவ்வளவு நேரம் எடுத்திருக்குமா என்று கேட்டார்.
சிறுவனின் உடலை பார்த்ததும் பெற்றோர்கள் கதறி அழுதது விவரிக்க முடியாதது.
https://twitter.com/ANI/status/1601388328070225920?s=20&t=Xe5WHUbK6YY7LHRJ3tBLmA