இந்திய பிரதமர் நரேந்திர மோடி – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இடையே சந்திப்பு நடைபெற உள்ள நிலையில், அமெரிக்க தயாரிப்புகள் மீதான கூடுதல் வரிகளை இந்தியா நீக்கியுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு சில எஃகு மற்றும் அலுமினியப் பொருட்களுக்கான வரியை அமெரிக்கா உயர்த்தியது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 28 அமெரிக்க தயாரிப்புகளுக்கு இந்தியா வரிகளை விதித்தது.
இந்தநிலையில், கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றபோது, இரு நாடுகளும் உலக வர்த்தக அமைப்பு சர்ச்சைகளை முடிவுக்குக் கொண்டு வர முடிவு செய்தன. இந்நிலையில், சில அமெரிக்க தயாரிப்புகள் மீதான கூடுதல் வரிகளை இந்தியா நீக்கியுள்ளது.
