20230304 114700

அமேசான் பே நிறுவனத்திற்கு ரூ.3 கோடி அபராதம்..!

விதிமீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட புகாரில் அமேசான் பே நிறுவனத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கி 3 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

அமேசான் பே மூலம் முன்னதாகவே பணம் செலுத்தி பொருள்களை வாங்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் மற்றும் வாடிக்கையாளா் விவரங்கள் சேகரிப்பு நடைமுறைகள் தொடா்பான புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை ரிசர்வ் வங்கி மேற்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை அமேசான் பே வாடிக்கையாளா்களை பாதிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.