கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் 3 நாட்களுக்கு இலவச சேவை வழங்குவதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு இலவச மொபைல் டேட்டா மற்றும் பிற சேவைகளை ஏர்டெல் அறிவித்துள்ளது. ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 1 ஜிபி இலவச டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் இலவசம். கூடுதலாக, ஏர்டெல் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு, வயநாடு வாடிக்கையாளர்களுக்கான பில் செலுத்தும் காலக்கெடு கூடுதலாக 30 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் பணம் செலுத்தாவிட்டாலும் அடுத்த ஒரு மாதத்திற்கு சேவைகளைப் பயன்படுத்தலாம். அடுத்த மாதத்திற்கு 2 மாத கட்டணம் செலுத்தினால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.