டெல்லியில் காற்றின் தரம் நேற்று மீண்டும் மிகவும் மோசமான நிலையை எட்டியது. ஞாயிற்றுக்கிழமையன்று காற்றின் தரக்குறியீடு 294-ஆக இருந்த நிலையில் திங்கள் அன்று அது 407 ஆக அதிகரித்தது.
வளிமண்டல நிலைமைகள் மற்றும் மத்திய டெல்லியில் ஏற்பட்ட தீ விபத்து போன்ற உள்ளூர் பாதிப்புகளே மாசு அதிகரிப்புக்கு காரணமாக இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் உடனடியாக முன்னேற்றம் ஏற்படும் என்ற கணிப்பை கருத்தில் கொண்டு, தரப்படுத்தப்பட்ட 3-ம் கட்ட செயல்திட்டத்தின் கீழ் தடைகளை செயல்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
செயல் திட்டம் என்பது, தலைநகர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நிலைமையின் தீவிரத்திற்கு ஏற்ப பின்பற்றப்படும் காற்று மாசு எதிர்ப்பு நடவடிக்கைகளின் தொகுப்பு என்பது குறிப்பிடத்தக்கது.