இந்தியா

சக்கர நாற்காலி இல்லாமல் பயணி மரணம்: ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம்!!

மும்பை விமான நிலையத்தில், விமானத்தில் இருந்து டெர்மினலுக்கு நடந்து சென்றபோது 80 வயது முதியவர் சுருண்டு விழுந்து இறந்த விவகாரத்தில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 30 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சிவில் ஏவியேஷன் இயக்குனரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது.

இச்சம்பவம் பிப்ரவரி 12ம் தேதி நடந்தது. ஒரு பயணிக்கு சக்கர நாற்காலி வழங்கத் தவறியதற்காக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ₹30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக டிஜிசிஏ மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்திற்கு காரணமான ஊழியர்கள் மீது ஏர் இந்தியா விமான நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த தகவல்களை அந்த அமைப்பு வழங்கத் தவறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தின் பின்னணி:

ஏர் இந்தியா விமானம் மூலம் பிப்ரவரி 12ம் தேதி மும்பை விமான நிலையத்தில் அமெரிக்க பாஸ்போர்ட்டுடன் வயதான தம்பதியினர் வந்திறங்கினர். அவர் டெர்மினலுக்கு செல்ல 2 சக்கர நாற்காலிகளை முன்பதிவு செய்திருந்தார். ஆனால் சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் ஏர் இந்தியா நிறுவனம் ஒரு சக்கர நாற்காலியை மட்டுமே வழங்கியது.

இதனால், முதியவர் தனது மனைவியுடன் நடந்து சென்று உள்ளார். இதில் அவர் சுருண்டு விழுந்து இறந்ததாக தகவல் வெளியானது.

பயணத்தின் போது ஏறும் போது அல்லது இறங்கும் போது உதவி தேவைப்படும் பயணிகளுக்கு போதுமான எண்ணிக்கையிலான சக்கர நாற்காலிகள் இருப்பதை உறுதி செய்ய அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சிவில் ஏவியேஷன் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 66 = seventy

Back to top button
error: