-Advertisement-
சீன எல்லையையொட்டி இன்றும் நாளையும் இந்திய விமானப் படை பயிற்சியில் ஈடுபடும் என தகவல் வெளியாகியுள்ளது.
அருணாசல பிரதேச விவகாரத்தில் இந்தியா-சீனா இடையே மோதல் வெடித்துள்ள நிலையில் விமானப்படை திறன் சோதனைக்காக இந்த பயிற்சியை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
-Advertisement-
அசாமின் தேஜ்பூர், சபுவா, ஜோர்ஹாட் மற்றும் மேற்கு வங்கத்தின் ஹஷிமாரா ஆகிய இடங்களில் உள்ள விமான தளங்களை பயிற்சிக்காக செயல்படுத்தும் என்றும் ரஃபேல், சுகோய் மற்றும் மிராஜ் உள்ளிட்ட போர் விமானங்களுடன் சி-130ஜே சூப்பர் ஹெர்குலிஸ், சினூக் ஹெலிகாப்டர்கள், அப்பாச்சி அட்டாக் ஹெலிகாப்டர்கள் ஆகியவையும் பயிற்சியில் பங்குபெற வாய்ப்புள்ளதாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-Advertisement-