பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே. அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நரம்பியல் நிபுணர் டாக்டர் வினித் சூரியின் மேற்பார்வையில் அத்வானி அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் உடல்நலக்குறைவு ஏற்பட்டு டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முன்னதாக அவர் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) சிகிச்சை பெற்று வந்தார். வயது காரணமாக அத்வானிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
Veteran BJP leader LK Advani was admitted to the Neurology department today morning at Indraprastha Apollo Hospital. He is stable and under observation: Apollo Hospital
(File pic) pic.twitter.com/N5yQ4bDvsn
— ANI (@ANI) August 6, 2024
2002 முதல் 2004 வரை இந்தியாவின் 7வது துணைப் பிரதமராக அத்வானி பதவி வகித்தார். அவர் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) இணை நிறுவனர்களில் ஒருவரும், ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் உறுப்பினரும் ஆவார். 1998 முதல் 2004 வரை உள்துறை அமைச்சராகப் பணியாற்றினார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக நீண்ட காலம் பணியாற்றினார். 2009 பொதுத் தேர்தலின் போது பாஜகவின் பிரதமர் வேட்பாளராக இருந்தார்.