ராகுல் காந்தியின் லண்டன் பேச்சால் அமளி நிலவியதால் சபை நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்கியவுடன், அமளி ஏற்பட்டது. ராகுல் காந்தியின் லண்டன் பேச்சுக்கு மக்களவையில் ராகுல் காந்தியை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கடுமையாக சாடினார்.
இதுகுறித்து அவர், “இந்தியாவின் ஜனநாயகம் குறித்து அன்னிய மண்ணில் இருந்து இந்தியாவை அவமதித்துள்ளனர். அவர் அவையில் மன்னிப்பு கேட்க வேண்டும்.” என கூறினார்.
இதையடுத்து, எதிர்க்கட்சியினர் அவையில் சலசலப்பை ஏற்படுத்தினர். இதையடுத்து, சபை நடவடிக்கைகள் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
Leave a Comment