அதானி குழும நிறுவனங்கள் மோசடி, வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் என்ற ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது, பங்கு வர்த்தக முதலீட்டாளர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து, அதானி குழுமத்துக்குச் சொந்தமான சிமென்ட் நிறுவனங்களான ஏசிசி மற்றும் அம்புஜா சிமென்ட் பங்குகள் 11 சதவீதம் சரிந்தன.
- Advertisement -
ஹிண்டன்பர்க் ஆய்வு அறிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து அதானி குழுமம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.