டெல்லியில் இன்று பள்ளிக்கு சென்று கொண்டிருந்த சிறுமியின் மீது சிறுவன் ஆசிட் வீசி தாக்கினார். இந்த சம்பவத்தில் சிறுமி பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவர் சப்தர்கஞ்ச் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிறுமியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் மருத்துவமனைக்கு வந்தனர். ஆபத்தான நிலையில் இருந்த சிறுமியிடம் விவரம் கேட்டறிந்தனர். டெல்லியில் உள்ள துவாரகா பகுதியில் இன்று காலை 9 மணியளவில் ஆசிட் வீச்சு சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், சம்பவத்திற்கான காரணங்கள் இன்னும் அறியப்படவில்லை. ஆசிட் வீச்சு நடத்திய வாலிபர் யார்? அவரும் அந்த பெண்ணுடன் அதே பள்ளிகளில் படிக்கிறாரா..? அல்லது வெளியாரா..? சிறுமியை ஆசிட் வீசி தாக்கியது ஏன்..? ஆகிய கோணங்களில் இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்து வருவதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.
