-Advertisement-
சபரிமலையில் கடந்த 30 நாட்களில் சுமார் 20 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
சபரிமலை கோயில் நடை கடந்த நவம்பர் 16-ம் தேதி திறக்கப்பட்டு, 17-ம் தேதி முதல் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். வார நாட்களிலும், அதைக்காட்டிலும் வார இறுதி நாட்களிலும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
-Advertisement-
இதனிடையே சபரிமலை தரிசனத்திற்கு இணையதளத்தில் 21 லட்சத்து 71 ஆயிரத்து 452 பேர் முன்பதிவு செய்திருந்த நிலையில், தற்போதுவரை 19 லட்சத்து 38 ஆயிரத்து 452 பேர் தரிசனம் செய்துள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
-Advertisement-