இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் அட்டைகளை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை டிசம்பர் 14 வரை நீட்டித்துள்ளது.
அந்த வகையில் பயோமெட்ரிக்ஸ் தவிர, ஆதார் அட்டையில் உள்ள பிற மாற்றங்களையும் ஆன்லைனில் செய்யலாம். அதன் ஆன்லைன் செயல்முறை பற்றி விரிவாகப் பார்ப்போம்.
ஆதார் அட்டையை எவ்வாறு புதுப்பிப்பது?
- UIDAI அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு (myaadhaar.uidai.gov.in) சென்று, உங்கள் ஆதார் எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்தி உள்நுழையவும். தளத்திற்குச் செல்ல உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கலாம்.
- உங்களின் தற்போதைய பயோமெட்ரிக் மற்றும் பிற விவரங்களைப் பார்க்க, ‘Aadhaar Update’ விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- விவரங்கள் சரியாக இருந்தால், தகவல் சரியான விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- நீங்கள் புதுப்பிக்க விரும்பும் விவரங்களைத் தேர்ந்தெடுத்து, தேவையான ஆவணங்களைப் பதிவேற்றி, மாற்றக் கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும்.