மத்திய பட்ஜெட் குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கடுமையாக விமர்சித்தார்.
2023-24ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய பின்னர், மத்திய பட்ஜெட் விவரங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவையில் தாக்கல் செய்தார். வலுவான இந்தியாவை உருவாக்கும் வகையில் இந்த பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி கூறினார்.
- Advertisement -
இந்நிலையில், மத்திய பட்ஜெட்டை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கடுமையாக விமர்சித்தார். அதாவது, “நாடாளுமன்ற அவையில் தாக்கல் செய்தது பட்ஜெட்டா? பட்ஜெட் என்றால் நாட்டின் வளர்ச்சி குறிக்கோள்களை வெளிப்படுத்த வேண்டும். ஜிடிபி வளர்ச்சி என்றால் முதலீடு மற்றும் வருவாய் விகிதத்தை வெளிப்படுத்த வேண்டும். மேலும் நாட்டின் வளங்களை மேம்படுத்தும் திட்டங்களை எடுத்து காட்ட வேண்டும். ஆனால் தற்போது நிதி அமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட் மளிகை கடை பில் போல இருக்கு” என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.