பிரபல உணவு விநியோக நிறுவனமான ‘ஸோமாட்டோ’ சமீபத்தில் தனது ஆண்டறிக்கையை வெளியிட்டது. ஆப் மூலம் அதிகளவு பிரியாணி ஆர்டர்கள் வந்துள்ளது தெரியவந்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த அங்கூர் என்பவர், இந்த ஆண்டு 3,300 ஆர்டர்கள் செய்து ‘தேசத்தின் மிகப்பெரிய உணவுப் பிரியர்..’ ஆனார். இதற்கிடையில், இந்த ஆண்டு தொடர்பான சில சுவாரஸ்யமான விஷயங்களை ஸோமாட்டோ வெளியிட்டுள்ளது.
புனேயில் வசிக்கும் தேஜாஸ், 2022ல், ‘ஸோமாட்டோ’ செயலி மூலம், 28 லட்சம் ரூபாய்க்கு உணவை ஆர்டர் செய்துள்ளார். இதனை மாட்டோ இன்ஸ்டாகிராம் மூலம் வெளியிட்டுள்ளது. ‘டிவிட்டரின் விலையை விட இது ரூ.36,42,17,44,48,38 மட்டுமே குறைவு’ என வேடிக்கையான தலைப்பு கொடுத்துள்ளது.
மற்றொரு நபர் ஒரே ஆர்டரில் ரூ.25 ஆயிரத்திற்கு பீட்சாக்களை ஆர்டர் செய்ததாக ஸோமாட்டோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ராகுல் என்ற மற்றொரு வாடிக்கையாளர் 1,098 கேக்குகளை ஆர்டர் செய்தார்.
தள்ளுபடி விளம்பரக் குறியீடுகளைப் பயன்படுத்துவதில், மேற்கு வங்காளத்தில் உள்ள ராய்கஞ்ச் முதலிடத்தில் உள்ளது. இங்கு 99.7 சதவீத வாடிக்கையாளர்கள் இந்த ஆண்டு தள்ளுபடி விளம்பரக் குறியீட்டுடன் ஆர்டர் செய்துள்ளனர்.
மும்பையைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் இந்த ஆண்டு ஸோமாட்டோ ஆர்டர்களில் விளம்பர குறியீடுகள் மூலம் ரூ.2.43 லட்சத்தைச் சேமித்துள்ளார்.
இதற்கிடையில், பிரியாணிக்குப் பிறகு, பெரும்பாலான பீட்சா ஆர்டர்கள் ஸோமாட்டோ செயலியில் வந்ததாக நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு நிமிடமும் 139 பீட்சா ஆர்டர்கள் பெறப்படுவதாக ஸோமாட்டோ கூறுகிறது.