யூடியூப்பை பார்த்து பிரசவம் பார்த்துக் கொண்ட 15 வயதே ஆன சிறுமி பெற்ற குழந்தையை கொன்ற அதிர்ச்சிகரமான நிகழ்வு மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்துள்ளது.
நாக்பூரைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு சமூக வலைத்தளம் மூலம் தாக்கூர் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தந்தையை பிரிந்து தாயுடன் தனித்து வசித்து வந்த சிறுமியிடம் அந்த இளைஞர் ஆசைவார்த்தை காட்டி அத்துமீறி பழகியுள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பம் ஆகியிருக்கிறார்.
- Advertisement -
இந்தநிலையில் கடந்த 3 ஆம் தேதி சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டபோது யூடியூப்பை பார்த்து குழந்தைப் பெற்றதுடன், பெல்ட்டால் குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். வேலை முடிந்து வீட்டிற்கு வந்த தாய், பல இடங்களில் ரத்தக்கறை படிந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து விசாரித்தபோது உண்மை தெரியவந்தது.
சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கொலை செய்யப்பட்ட குழந்தை உடலை கைப்பற்றி சிறுமியை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.