கடந்த நிதியாண்டை விட 2021-22ல் வங்கி சேவைகள் தொடர்பான வாடிக்கையாளர் புகார்களின் எண்ணிக்கை 9.39 சதவீதம் அதிகரித்து 4,18,184 ஆக உயர்ந்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தெரிவித்துள்ளது.
ஏடிஎம் அல்லது டெபிட் கார்டுகள் மற்றும் மொபைல்/எலக்ட்ரானிக் பேங்கிங் தொடர்பான பிரச்சனைகள் அதிகம் உள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது.
அறிக்கையின்படி, மொத்த புகார்களில், ஏடிஎம் மற்றும் டெபிட் கார்டுகள் தொடர்பான புகார்கள் 14.65 சதவீதமாகவும், மொபைல் மற்றும் மின்னணு வங்கி புகார்கள் 13.64 சதவீதமாகவும் உள்ளன. 90 சதவீத புகார்கள் டிஜிட்டல் முறையில் ஆன்லைன் புகார் மேலாண்மை அமைப்பு, மின்னஞ்சல் மூலம் பெறப்படுகின்றன.
66.11 சதவீத நிர்வாகம் தொடர்பான குறைகள் பரஸ்பர தீர்வு, சமரசம் மூலம் தீர்க்கப்பட்டன. 2020-21ல் 96.59 சதவீதமாக இருந்த குறைதீர்க்கும் அதிகாரியின் புகார் தீர்வு விகிதம் 2021-22ல் 97.97 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
