ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால், தெற்கு மத்திய ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 86 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 70 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கனமழை காரணமாக இன்று (திங்கட்கிழமை) ரத்து செய்யப்பட்ட ரயில்களின் பட்டியலில் காக்கிநாடா துறைமுகம்-லிங்கம்பள்ளி, செகந்திராபாத்-குடுரு, பிதார்-மச்சிலிப்பட்டினம், மச்சிலிப்பட்டினம்-பிதார், விஜயவாடா-செகந்திராபாத், விசாகப்பட்டினம்-செகந்திராபாத், டெல்லி, புதுடெல்லி முதல் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் வரை பல ரயில்கள் உள்ளன.
திருப்பிவிடப்பட்ட ரயில்களின் பட்டியலில் 12763 திருப்பதி-செகந்திராபாத், 22352 SMVT பெங்களூர்-பட்லிபுத்ரா, 22674 மன்னார்குடி-பகத் கி கோடி, 20805 விசாகப்பட்டினம்-புது டெல்லி, விசாகப்பட்டினம்-மும்பை, பிதார்-மதுரை மற்றும் பல ரயில்கள் உள்ளன.
Bulletin No. 21 SCR PR No. 346 Dt. 01.09.2024 on "Cancellation/Diversion of Trains due to Heavy Rains" pic.twitter.com/pf5brQyOUG
— South Central Railway (@SCRailwayIndia) September 1, 2024