இந்தியா

பீகாரில் கனமழை; மின்னல் தாக்கி 8 பேர் பலி.. தலா ₹4 லட்சம் இழப்பீடு..!

பீகாரில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் 4 மாவட்டங்களில் மின்னல் தாக்கி 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ₹4 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கத்தால் பாட்னா மற்றும் அவுரங்காபாத்தில் தலா 3 பேரும், நவாடா மற்றும் சரண் ஆகிய இடங்களில் தலா ஒருவரும் உயிரிழந்ததாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அடுத்த 36 மணி நேரத்திற்கு மாநிலத்தின் 9 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யும் என்று கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!