Sunday, July 14, 2024
Homeஇந்தியாஅசாமில் கனமழையால் 78 பேர் உயிரிழப்பு..!

அசாமில் கனமழையால் 78 பேர் உயிரிழப்பு..!

அசாமில் கனமழைக்கு இதுவரை 78 பேர் உயிரிழந்துள்ளனர்.

அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் மாநிலத்தின் 28 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் 22 லட்சத்து 74 ஆயிரத்து 289 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கனமழை காரணமாக ஏற்கனவே 70 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது.

269 நிவாரண முகாம்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர். பிரம்மபுத்ரா நதியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அபாய அளவை தாண்டி நீர் ஓடுவதால் கரையோர மக்களுக்கு மீண்டும் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 3 = 4

- Advertisment -

Latest Update

error: Content is protected !!