இந்தியாவில் இன்று புதிதாக 754 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த உயிரிழப்பு கர்நாடகாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 426 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.
இதையடுத்து, நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 92 ஆயிரத்து 710 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 57 ஆயிரத்து 297 ஆக அதிகரித்துள்ளது.
- Advertisement -
அதே நேரத்தில், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மொத்தம் 5 லட்சத்து 30 ஆயிரத்து 790 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு தழுவிய தடுப்பூசி பிரச்சாரத்தின் கீழ் இதுவரை சுமார் 220.64 கோடி டோஸ் கோவிட்-19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.