ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தலில் 69.65 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் நடந்த மூன்று கட்டங்களிலும் 63.45 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த தேர்தலை விட அதிகம் என ஜம்மு தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 18ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட வாக்குப்பதிவில் 61.38 சதவீத வாக்குகளும், செப்டம்பர் 25ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 57.31 சதவீத வாக்குகளும் பதிவாகின. கடைசி கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 1ஆம் தேதி நடைபெற்றது.
90 உறுப்பினர்களைக் கொண்ட ஜம்மு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அக்டோபர் 8ஆம் தேதி அறிவிக்கப்படுகிறது.