சபரிமலைக்கு 9 நாட்களில் 6 லட்சம் பேர் வருகை!!
மண்டல மகரவிளக்கு சீசனின் முதல் ஒன்பது நாட்களில் கேரளாவில் உள்ள சபரிமலைக்கு 6 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்ததாக தேவஸ்தானம் (திருவாங்கூர் தேவஸ்வம்) வாரியம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 16 அன்று கோயில் திறக்கப்பட்ட நிலையில், இதுவரை 6,21,290 பேர் தரிசனம் செய்துள்ளனர் என்று திருவாங்கூர் தேவஸ்தானம் தலைவர் PS பிரசாந்த் தெரிவித்தார். கடந்த ஆண்டு இதே காலத்தில் 3,03,501 பேர் மட்டுமே வருகை தந்துள்ளனர். 13.33 கோடி வருமானம், இந்த முறை இதுவரை ரூ.41.64 கோடி வருமானம் நன்கொடையாக வந்துள்ளது.
காவல்துறையினரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தற்போது கோவிலின் புனித படிகளில் நிமிடத்திற்கு 80 பக்தர்கள் ஏற முடிகிறது என்று கூறப்படுகிறது.