தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் மற்றும் கட்டண பிளாசாக்களில் ஃபாஸ்ட் டேக் மூலம் வருவாய் கடந்த ஆண்டு 46 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தெரிவித்துள்ளது. அதாவது ஃபாஸ்ட் டேக் மூலம் மத்திய அரசுக்கு கடந்த 2022ம் ஆண்டில் ரூ. 50,855 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
2021ல் இந்த வருமானம் ரூ. 34,778 கோடி. டிசம்பர் 2022க்குள், சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட் டேக் மூலம் தினசரி வருவாய் ரூ. 134.44 கோடி ஆக இருந்துள்ளது. ஆனால் டிசம்பர் 24ஆம் தேதி அதிகபட்சமாக ரூ. 144.19 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக NHAI ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், இதுவரை 6.4 கோடி ஃபாஸ்ட் டேக்குகளை வெளியிட்டுள்ளதாக NHAI கூறியுள்ளது. இந்த ஃபாஸ்ட் டேக் காரணமாக தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.