images 3

பிரபலங்களின் பான் கார்டு எண்ணை திருடி கிரெடிட் கார்டு மோசடி.. 5 பேர் கைது..!

சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்களின் பான் கார்டு எண்ணை திருடி கிரெடிட் கார்டு பெற்று, 21 லட்சம் ரூபாய் மோசடி செய்த சைபர் திருடர்களை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

ஜி.எஸ்.டி. இணையதளம் மூலம் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் எம்.எஸ். தோனி, பாலிவுட் பிரபலங்கள் அபிஷேக் பச்சன், ஷில்பா ஷெட்டி, மாதுரி தீட்சித், மற்றும் இம்ரான் ஹாஸ்மி ஆகியோரின் பான் கார்டு எண்களை சைபர் குற்றவாளிகள் கண்டுபிடித்துள்ளனர். பின்னர் புனேவில் உள்ள ஒன் கார்டு நிறுவனத்தின் மூலம் பிரபலங்கள் பெயரில் கிரெடிட் கார்டுகளை பெற்ற சைபர் கிரைம் திருடர்கள், ஆன்லைன் மூலம் 21 லட்சம் ரூபாய்க்கு பொருட்களை வாங்கி தள்ளியுள்ளனர்.

இது குறித்து மும்பை போலீசில் பிரபலங்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட டெல்லி போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. இதையடுத்து களத்தில் குதித்த டெல்லி போலீஸ் புனித், முகமது ஆசிப், சுனில் குமார், பங்கஜ் மிஸ்ரா மற்றும் விஸ்வா ஷர்மா ஆகியோரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.