சமீபத்தில் வெளிவந்துள்ள புதிய அப்டேட் படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்தில் 5% அகவிலைப்படி (DA) உயர்வு இருக்கும் என்பது உறுதியாகி இருக்கிறது. இதன் மூலம் அவர்களின் ஊதியம் கணிசமாக உயர்வதற்கு வாய்ப்புகள் உள்ளது.
தற்போது, அடுத்த அகவிலைப்படி (DA) உயர்வு தொடர்பான அறிவிப்புக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்தில் ஜாக்பாட் அறிவிப்பு வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. ஏனென்றால் சமீபத்தில் வெளிவந்துள்ள அகில இந்திய CPI-IW தரவு இந்த நம்பிக்கையை உருவாக்கி இருக்கிறது. அந்த வகையில் டிஏவை நிறுவுவதில் முக்கிய அங்கம் வகிக்கும் ஏஐசிபி இன்டெக்ஸ், மே மாதத்தில் எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகரித்துள்ளது. இதை தொடர்ந்து ஜூலை மாதத்திலும் இந்த ஏஐசிபி இன்டெக்ஸ் உயர்வை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளிவந்துள்ள ஊடக ஆதாரங்களின்படி, ஜூலை மாதத்தில் அகவிலைப்படி 5% அதிகரிக்கலாம் என்றும் இதன் மூலம் ஒட்டுமொத்த DA தொகை 40% ஆக அதிகரிக்கலாம் என்றும் தெரிகிறது. அந்த வகையில் மத்திய அரசாங்கம் வரும் ஜூலை 31ம் தேதி அன்று இந்த DA உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடலாம் என தகவல்கள் கூறுகிறது. இதற்கு முன்னதாக மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை நிர்ணயிக்கும் அகில இந்திய CPI-IW கடந்த ஏப்ரல் மாதத்தில் 1.7 புள்ளிகள் உயர்ந்து 127.7 ஆக இருந்தது. அதே போல மே மாதத்திற்கான AICPI புள்ளிவிவரங்கள் 129 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்த எண்ணிக்கை அடுத்து வரும் மாதங்களில் கூடுதலாக உயரும் பட்சத்தில் ஊழியர்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக 6 சதவீதம் வரை அகவிலைப்படியை பெறுவார்கள் என்பது உறுதியாகியுள்ளது. அந்த வகையில் ஊடக அறிக்கைகளின் படி, இம்முறை மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அல்லது 6% ஆக அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டால் அவர்களின் மாத சம்பளத்தில் பெறும் உயர்வு இருக்கும். மேலும் இந்த அறிவிப்பின் மூலம் பல லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பலனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh