- Advertisement -
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 440 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வகையில் நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 440 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4.47 கோடியாக உள்ளது.
- Advertisement -
மறுபுறம், சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 3,294 ஆக அதிகரித்துள்ளது. 3 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,30,779 ஆக உயர்ந்தது.
- Advertisement -