ஏப்ரல் மாதத்திற்குள் மேலும் 4 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை – கோவை இடையே 12வது வந்தே பாரத் ரயிலை வரும் 8ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதையடுத்து டெல்லி-ஜெய்ப்பூர் இடையே வந்தே பாரத் ரயில் வரும் 10ம் தேதி தொடங்கப்படுகிறது.
செகந்திராபாத்தில் இருந்து திருப்பதிக்கு இந்த மாதத்திற்குள் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத் செகந்திரபாத் ஆகிய இரட்டை நகரங்களில் இருந்து திருமலைக்கு தரிசனம் செய்ய செல்லும் பக்தர்களுக்கு இந்த ரயில் ஒரு வரப்பிரசாதமாக அமைய உள்ளது.
இதேபோல், பாட்னா-ராஞ்சி இடையே 15வது வந்தே பாரத் ரயில் சேவை இந்த மாதம் தொடங்கி வைக்கப்பட உள்ளது.