இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,824 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 18 ஆயிரத்து 389 ஆக உயர்ந்துள்ளது.
இதே வேளையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,784 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். ஒரே நாளில் 3,800க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
இந்தியாவில் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் அதிகபட்ச கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது மக்களை கவலையடைய செய்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1