நிதி சிக்கலில் ஸ்பைஸ் ஜெட்.. ஊழியர்களுக்கு 3 மாத விடுமுறை.. சம்பளம் இல்லை!
குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்கும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.
கடந்த 6 ஆண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வரும் விமான நிறுவனம், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சூழலில்தான் நிறுவனம் செலவுகளைக் குறைப்பதில் கவனம் செலுத்தியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக 150 கேபின் குழு உறுப்பினர்கள் தற்காலிகமாக மூன்று மாதங்களுக்கு விடுப்பில் வைக்கப்படுவதாக அறிவித்தது. நிறுவனத்தின் நீண்ட கால நலன்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.