earthquake 4

ஜம்மு காஷ்மீரில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வாரில் நள்ளிரவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. கிஷ்த்வாரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 11.15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் தீவிரம் 3.6 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

பூமியின் உட்பகுதியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் அசைவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜம்மு காஷ்மீரில் கடந்த 10 நாட்களில் ஏற்படும் மூன்றாவது நிலநடுக்கம் இதுவாகும். ஜனவரி 1ம் தேதி டெல்லியில் 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், காஷ்மீரிலும் நில நடுக்கம் ஏற்பட்டது. கடந்த 5ம் தேதி ஆப்கானிஸ்தானில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஜம்மு காஷ்மீர் மற்றும் டெல்லியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.