கனமழை காரணமாக கேரளாவின் வயநாடு மாவட்டம் மேப்பாடி அருகே உள்ள மலைப் பகுதிகளில் இன்று (ஜூலை 30) செவ்வாய்க்கிழமை காலை நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவின் இடிபாடுகளில் நூற்றுக்கணக்கானோர் புதையுண்டு இருக்கலாம் என அதிகாரிகள் அஞ்சுகின்றனர். இந்த விபத்தில் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளதுடன் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பாக அனைத்து அரசு நிறுவனங்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலச்சரிவில் 24 பேர் உயிரிழந்ததையும், 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததையும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் உறுதி செய்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Update | Wayanad landslide | 24 people dead, 70 people injured, says, Kerala Health Minister Veena George https://t.co/DndZhVTMnn
— ANI (@ANI) July 30, 2024