தலைநகர் டெல்லியில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக பள்ளிகளுக்கு 2 வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கடும் குளிருடன் அடர்ந்த பனிமூட்டம் காணப்படுகிறது. சாலையில் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருப்பதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் பனிமூட்டத்தால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாணவர்களின் சிரமத்தை கருத்தில்கொண்டு பள்ளிகளுக்கு டெல்லி கல்வி இயக்குநரகம் 2 வாரம் விடுமுறை அளித்துள்ளது.
