திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிப்ரவரி மாதத்தில் 18.42 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த மாதத்தில் மொத்தம் ரூ.114.29 கோடி உண்டியலில் காணிக்கை பெறப்பட்டது. 92.96 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது மற்றும் 34.6 லட்சம் பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.