நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 92,955 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, 176 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய மருத்துவ மற்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதன் மூலம் மொத்த நோய்தொற்றாளர்களின் எண்ணிக்கை 44,678,822 ஆக உள்ளது. நாட்டில் தற்போது 2,670 பேர் தொற்றுக்கு சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் ஒரு மரணத்துடன், மொத்த இறப்பு எண்ணிக்கை 5,30,707 ஐ எட்டியுள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 220.10 கோடி கொரோனா தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக மத்திய மருத்துவ மற்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Leave a Comment